கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும்.! சிக்கலில் மாட்டிய பள்ளி நிர்வாகம்! போலீசார் அதிரடி நடவடிக்கை!!



students-compelled-to-wear-hijab-in-mathiya-pradesh

மத்திய பிரதேசத்தில் பள்ளிக்குள் மாணவர்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என வலியுறுத்திய பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச தலைநகரான போபாலில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் தாமோ மாவட்டத்தில் கங்கா ஜமுனா உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 9 பேர் இஸ்லாமியர்கள் எனவும் இருவர்கள் மட்டும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு 8 ஆம் வகுப்பு பயின்று வரும் இரு மாணவிகள் பள்ளியில் தங்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அவர்கள் கையில் அணிந்திருந்த கயிறு மற்றும் நெற்றி பொட்டு ஆகியவற்றை எடுக்க பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களைப் பாட வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இஸ்லாமியர்கள் அல்லாத வேறு மதத்தைச் சேர்ந்த மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.