சடாரென சரிந்து விழுந்த பாலம்., திக் திக் வீடியோ காட்சி..!! பீதியில் மக்கள்.!!
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளைக்காடாக மாறி உள்ளது. இந்த பருவமழை காரணத்தால் இமாச்சலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மழையினால் பாலங்கள் முழுவதும் அடித்து செல்லப்பட்டுள்ளது.
ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மழையில் இழுத்து செல்லப்பட்டன. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை அச்சுறுத்தி வருவதால் மாநிலமே வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கிறது.
இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர்சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மேலும் தொடர்ந்து 24 மணி நேரம் கன மழை பெய்ய உள்ளதால் நம் மாநில மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.
இந்த வெள்ளத்தினால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் சடாரென அடித்து செல்லப்படும் வீடியோ காட்சி வெளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
#NewsUpdate | மழையால் சடாரென சரிந்த பாலம்.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்..#HimachalPradesh #HeavyRain #Bridgecollapsed #NewsTamil24x7 pic.twitter.com/LMgPXUcbvA
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) July 10, 2023