சூரத்தில் பரபரப்பு.! சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு தொழிலாளர்கள் திடீர் போராட்டம்!



Sueat migrant workers strike demanding to go native

குஜராத் மாநிலம் சூரத்தில் உணவு மற்றும் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கோரி வெளியூர் தொழிலாளர்கள் திடீரென நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 வரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் நோய் தொற்று இந்தியாவில் அதிகமாகி வருவதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதனால் வெளியூர்களில் தங்கி பணி புரிவர்களுக்கு உணவு மற்றும் வாழ்வாதாரத்தை குறித்து அச்சம் அதிகரித்து வருகிறது.

surat

இந்நிலையில் சூரத்தில் தங்கி பணிபுரியும் வெளியூர் தொழிலாளர்கள் நேற்று இரவு திடீரென சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுத்கு உணவு மற்றும் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பின்னர் போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர். மேலும் போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியவைகளை தீயணைப்பு துறையினர் அணைத்தனர். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ ஹர்ஷ் சங்கவி தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவது சாத்தியமில்லாதது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "சூரத்தில் தினந்தோறும் 5 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த சூழலில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது சாத்தியமில்லாதது. சூரத்தில் உள்ள அனைவருக்கும் உணவு வழங்க அரசு உறுதி செய்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.