மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் தடையா...?!! ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு..!!
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
ஆண்டுதோறும் தைப் பொங்கல் திருநாளை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அவற்றில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.
இதற்கிடையே ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் இடையில் சில காலம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடைபட்டன. இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மெரினாவில் தன்னெழுச்சியாக கூடிய இளைஞர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக கடந்த 2017 முதல் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி முதல் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.