பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
அதிரடியாக உயர்த்தப்பட்ட நுழைவு கட்டணம், மக்களை திணற வைத்த புதிய அறிவிப்பு
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் நுழைவுக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் 17 ம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்டு தற்போது உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்வது காதல் சின்னம் தாஜ்மஹால்.
மேலும் இதுவரை தாஜ்மஹாலை சுற்றி பார்க்க ரூ.50 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாஜ் மஹாலின் முக்கிய பகுதியான கல்லறை பகுதிக்கு செல்வதற்கு கூடுதலாக ரூ.200 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ரூ.50 டிக்கெட் பெறும் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.அவர்கள் தாஜ்மஹாலின் வெளிப்புறம் மட்டும்சுற்றி பார்க்க முடியும்.
அதுமட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.250, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.1,300 செலுத்த வேண்டும். சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ரூ.540 க்கு பதிலாக ரூ.740 நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். என புதிய கட்டண வசூல் முறை தொடங்கப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து இந்திய தொல்லியல் துறை தலைவர் வசந்த் ஸ்வர்னாகர் கூறுகையில்,நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கும் மாசுபாடுகளில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காகவும், தாஜ்மஹாலை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்கவுமே இந்த புதிய திட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.