குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
"எல்லாம் பொய்.. அப்படி ஒரு பலகையே அங்கு இல்லை" தமிழ் மொழிபெயர்ப்பு பற்றி தமிழிசை கருத்து!
182 மீட்டர் உயரத்தில் குஜராத்தின் நர்மதை ஆற்றின் அணை உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி கடந்த 31ம் தேதி திறந்து வைத்தார். இந்த சிலையானது படேலின் 143வது பிறந்த நாளான அன்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
3000 கோடி செலவில் மத்திய அரசால் கட்டப்பட்டுள்ள இந்த சிலைக்கு சர்தார் பட்டேல் இந்திய மாநிலங்களை இணைத்ததை நினைவு கூறும் வண்ணமாக இதற்கு The Statue of Unity என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் 'ஒற்றுமையின் சிலை' என மொழிபெயர்க்கப்படுகிறது.
ஆனால் சர்தார் படேல் சிலை வளாகத்தில் பல மொழிகளில் அந்த சிலையின் பெயர் எழுதப்பட்டிருந்த ஒரு பதாகை இருந்ததாகவும், அதில் தமிழில் ''ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது தமிழை கொச்சைப்படுத்த வேண்டுமென்றே செய்யப்பட்ட மத்திய அரசின் சதி என்று பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் "அப்படி ஒரு பலகையே அங்கு வைக்கப்படவில்லை.வைக்கப்படாததால் அகற்றப்படவும் இல்லை", என்று தெளிவுபடுத்தியுள்ளனர் சம்மந்தப்பட்டவர்கள்.
லஞ்ச, ஊழலை ஒழிக்க நினைக்கும் பாஜகவையும், மோடியையும் எதிர்த்து, ஊழலில் திளைக்க திட்டமிடும் ஒரு கும்பல், தமிழை வைத்து தமிழர்களுக்கு துரோகம் செய்து பிழைப்பு நடத்தும் ஒரு சில தீய சக்திகள், குறிப்பாக சில படித்த பயங்கரவாதிகள், தவறான, முறையற்ற செய்திகளை சமூக ஊடகங்களில் செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் இவர்களை அடையாளம் கண்டு புறந்தள்ளுவதே எதிர்கால தமிழக வளர்ச்சிக்கு நலன் தரும்.
உஷார் தமிழர்களே உஷார்!" என்று பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியுள்ள விளக்கம் உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் "பொய்யர்கள்! கண்டிக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.
பொய்யர்கள்? கண்டிக்கிறோம் https://t.co/vzyTQm6D1m
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 1, 2018