பொதுத்தேர்வில் பள்ளி மாணவியிடம் அத்து மீறிய ஆசிரியர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நாதாபுரத்தில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக லாலு என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கோழிக்கோடு அருகே உள்ள வேறு ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு கண்காணிப்பாளராக சென்றுள்ளார். அப்போது தேர்வு நடந்து கொண்டிருந்தபோது மாணவியிடம் ஆசிரியர் லாலு பாலியல் அத்திமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மாணவி பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிரியர் லாலுவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.