புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அட கொடுமையே... செல்போனை பிடுங்கியாதால் ஆத்திரம்.!! ஆசிரியருக்கு கத்திக்குத்து.!!
உத்திர பிரதேச மாநிலத்தில் மாணவர்களிடமிருந்து செல்போனை கைப்பற்றிய ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களிடமிருந்து செல்போனை கைப்பற்றிய ஆசிரியர்
உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ராஜேந்திர பிரசாத் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறைக்குள் செல்போன் கொண்டு வந்ததாக தெரிகிறது. இதனைக் கண்ட ஆசிரியர் ராஜேந்திர பிரசாத் மாணவர்களிடமிருந்து செல்போன்களை கைப்பற்றி இருக்கிறார்.
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்
அப்போது ஆத்திரமடைந்த மாணவன் தான் வைத்திருந்த கத்தியால் ஆசிரியரை சரமாரியாக குத்தி இருக்கிறான். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் அலறி துடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வகுப்பறையிலிருந்த மாணவர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் காயமடைந்த ராஜேந்திர பிரசாத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே... ஒரு தலை காதல் கொடூரம்.!! 17 வயது சிறுமி எரித்து கொலை.!! வாலிபர் வெறி செயல்.!!
காவல்துறை விசாரணை
இதனையடுத்து பள்ளிக்கு விரைந்த காவல்துறையினர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த ஆசிரியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்போனை கைப்பற்ற முயன்ற போது பள்ளி ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அசாமில் கொடூரம்... நள்ளிரவில் கணவன் படுகொலை.!! சரணடைந்த மனைவி.!!