#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: இதய பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர்..!
உடல்நலம் மற்றும் இதயம் தொடர்பான பரிசோதனைக்காக முதல்வர் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.
தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் நிறுவனர், தலைவர், தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ். இவருக்கு 68 வயது ஆகிறது. இதனால் வயது சார்ந்த நோய்கள் மற்றும் இதய பிரச்சனை இருக்கிறது.
இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை எடுத்துக்கொள்வது மற்றும் உடலை பரிசோதனை செய்வது இயல்பானது. அந்த வகையில், இன்று ஹைதராபாத் நகரில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகியுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் உடல்நல பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும், இதயம் தொடர்பான ஆஞ்சியோகிராம் சிகிச்சை பரிசோதனை மேற்கொள்வதாகவும் அம்மாநில முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.