முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய 16 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்; கல்லூரியில் சேர்ந்த ஆண்டே நடந்த சோகம்.!



Telangana girl Died Heart Attack While Dance on College Freshers Day 


இதயத்தில் ஓட்டை இருந்தாலும் கனவுகளுடன் படித்து முடித்துவிடலாம் என்று எண்ணிய சிறுமியின் உயிர் கல்லூரி வளாகத்திலேயே மாரடைப்பால் பறிபோனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் மாவட்டம், ஞாலகொண்டப்பள்ளி செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் முதல் ஆண்டு பயின்று வரும் மாணவி ப்ரதீப்தி (வயது 16). இவர் நேற்று தனது கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு நடனம் ஆடியுள்ளார். 

அப்போது, எதிர்பாராத விதமாக நிலைகுலைந்து மயங்கி சரித்துள்ளார். அவரை மீட்ட நிர்வாகத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, மாணவி ப்ரதீப்தி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. 

அவருக்கு சிறுவயதில் இருந்து இதயத்தில் ஓட்டை இருந்ததாக கூறப்படும் நிலையில், பெற்றோரிடம் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியும் சில காரணங்களால் அவை மேற்கொள்ள இயலவில்லை.

இதற்கிடையில் தான் கல்லூரியில் நடனம் ஆடிய மாணவி, நடனமாடியபோதே உயிரிழந்து இருக்கிறார். இந்த சம்பவம் சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தந்தை குண்டு அஞ்சையா, தாயார் சரதலா. இவர்களின் சொந்த ஊர் அங்குள்ள வெங்கட்டாயபள்ளி மண்டல் ஆகும்.