திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மகன் வீட்டில் விளையாடுகிறானே என அலட்சியமா இருக்கீங்களா?.. பெற்றோர்களே கவனம் - இந்த வீடியோ உங்களுக்குத்தான்.!
வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்தது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், சுரராம் பகுதியில் 10 வயது சிறுவன் நேற்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, சிறுவன் தனது வீட்டிற்கு வர முயற்சித்தார்.
அந்த சமயத்தில், சிறுவன் அருகில் சென்ற நாய் ஒன்று, திடீரென அவனை கடிக்க தொடங்கியுள்ளது. இதனால் பதறிப்போன சிறுவன் நாயின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்தும் பலனில்லை.
சிறுவன் நாயின் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுவனை நாய் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இன்றளவில் பல பெற்றோர் தங்களின் குழந்தைகளில் வீட்டின் வெளியே தானே விளையாடுகிறார்கள் என அலட்சியமாக இருக்கிறார்கள். ஆனால், அங்குதான் விபரீதம் ஏற்படுகிறது.