காவல் ஆய்வாளர் மர்மம் மரணம்; வீட்டில் சடலமாக மீட்பு.!



Telangana Kammam Cop Mystery Death 


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் காளி பிரசாத் (வயது 58). 

கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிரிசில்லா மாவட்டம், எல்லரெட்டிப்பேட்டை கலால் பிரிவில் பணியாற்றி வந்தவர், தற்போது பணி மாற்றப்பட்டு இங்கு வந்துள்ளார். 

இன்று அவர் தனது வாடகை வீட்டில் மர்மமனான வகையில் இறந்து கிடந்தார். அவரின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

காவல் ஆய்வாளரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதால், அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.