திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தேர்வு பயத்தால் விபரீதம்: 17 வயது சிறுமி தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி வர்ஷா. இவர் சமீபத்தில் நடைபெற்ற தேர்வுக்காக தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்வு பயத்தில் இருந்து வந்த சிறுமி அதீத பயத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதனால் ஒரு கட்டத்தில் பயத்தின் உச்சகட்டம் காரணமாக தனது வாழ்நாளை முடிக்க வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வுகள் என்பது நமது வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை. அவை தற்காலிகமான முடிவுகளை தருகின்றன என்பதை பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். பயம் கொள்வது தேவையற்றது என்பதையும் பெற்றோர்கள் புரிய வைக்க வேண்டும்.