மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கரம்... இரட்டை கொலை செய்த ராணுவ அதிகாரி.! காவல்துறையிடம் சிக்கியது எப்படி.?
ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவி மற்றும் மகளை இரட்டை கொலை செய்து விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த ராம் பிரசாத் வர்மா என்ற ராணுவ வீரர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நேபாள நாட்டைச் சேர்ந்த ருக்மீனா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ரித்திமா என்ற மகள் இருந்தார்.
இந்நிலையில் காவல்துறையை தொடர்பு கொண்ட ராம்ப் பிரசாத் சர்மா தனது மனைவி மற்றும் மகள் இருவரும் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பற்றி உயிரிழந்து விட்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் இருவரும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ வீரரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். குடும்பத் தகராறு காரணமாக இருவரையும் கழுத்தை நெறித்து கொலை செய்த பின் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக பரபரப்பு வாக்குமூலத்தை அளித்திருக்கிறார். அவரது பிரிவின் சுபேதாரின் புகாரின் பேரில் ராம் பிரசாத் மீது ஐபிசி பிரிவு 302-ன் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.