குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
உத்தரகாண்டில் பயங்கரம்.. சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து..40 தொழிலாளர்களின் கதி என்ன.?
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரீ தாம் நகருக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. இதனால் சில்க்யாரா - தண்டல்கன் பகுதிகளை இணைக்கும் வகையில் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைப்பாதையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தன.
இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது அதிகாலையில் தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பணியில் 40 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று சுரங்க பாதையில் 150 மீட்டர் தொடக்கப்பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்த இடிபாடுகளில் சுரங்க பாதையில் வேலை செய்து கொண்டு இருந்த 40 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதனையடுத்து உடனடியாக தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் சுரங்க பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.