திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஏசி வெடித்ததில் பெண் உட்பட இரண்டு குழந்தைகள் தீயில் கருகி பலி...!
வீட்டில் உள்ள ஏசி வெடித்து, ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் ராயச்சூர், சக்தி நகரில் இருக்கும் ஒரு வீட்டில் திடீரென ஏசி வெடித்து அறை முழுவதும் தீப்பறவியது. இதில் அறையில் இருந்த தாயும், இரண்டு குழந்தைகளும் வெளியில் வர முடியாமல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.