திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொடூரம்... திருமணமாகாத இளம் பெண்ணின் உடலுக்கு நேர்ந்த கொடூரம்... காவல்துறை விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
ஒடிசா மாநிலத்தில் எரிந்து கொண்டிருந்த இளம் பெண்ணின் உடலை எடுத்து இரண்டு நபர்கள் செய்த காரியம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரிபாடா பகுதியைச் சேர்ந்த மதுஸ்மிதா என்ற இளம் பெண் உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கான சடங்குகள் செய்யப்பட்டு. எரியூட்டுவதற்காக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
பின்னர் சுடுகாட்டில் அந்தப் பெண்ணின் சடலம் ஊர் மக்கள் சூழ எரியூட்டப்பட்டிருக்கிறது. இளம் பெண்ணின் சடலம் தீயில் எரிந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு பேர் சடலத்தை எடுத்து அதை மூன்று பங்குகளாக பிடித்து இரண்டு பங்கை தீயில் வீசிவிட்டு ஒரு பங்கை சாப்பிட்டுள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த ஊர்மக்கள் அந்த இருவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையின் விசாரணையில் அவர்கள் பெயர் சுந்தர் மோகன் சிங் (58), நரேந்திர சிங் (25) என்பது தெரியவந்தது. இவர்களில் சுந்தர் மோகன் சிங் சூனியம் வைப்பவர் என்பதும் திருமணமாகாத பெண்ணின் மாமிசத்தை சாப்பிட்டால் சக்தி கிடைக்கும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.