மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜம்முவில் தாறுமாறாக வந்த பேருந்து..300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. பயணிகளின் கதி என்ன..?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது தோடா என்ற பகுதியின் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் தாறுமாறாக வந்த அந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் இதுவரை 33 பேர் பலியானதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சிலரை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.