"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
சமையல் கியாஸ் சிலிண்டர்கள் அதிரடி விலை குறைப்பு: மத்திய அரசின் முடிவால் குடும்பதலைவிகள் மகிழ்ச்சி..!!
வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களின் மாதந்தோறும் உயர்ந்து வந்த நிலையில், அதன் விலையில் ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.400 குறைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் தற்போது வீட்டுஉபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,118.50 க்கு விற்கப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மட்டும் குறைக்கப்பட்டது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மட்டும் குறைக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 30) அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் ரூ.1,118.50 ஆக உள்ள வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, இன்று முதல் ரூ.918.50-க்கு விற்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.718.50-க்கு விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.