45 கைத்துப்பாக்கிகளை கடத்தி வந்த தம்பதியினர்: சுற்றி வளைத்த காவல்துறையினர்..!



The couple smuggled 45 pistols from Vietnam

வியட்நாம், ஹோசி மின் நகரில் இருந்து விமானம் மூலம் டெல்லி, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்க்கு ஒரு தம்பதியர் தங்களது கைக்குழந்தையுடன் வந்திறங்கினர். இவர்களது பெயர் ஜக்ஜித்சிங் - ஜஸ்வந்தர் கவுர் என்று கூறப்படுகிறது. விமான நிலையத்துக்குள் இருந்து வெளியே செல்லும் வழியில் ஜக்ஜித்சிங்கின் தம்பி மஞ்சித்சிங் என்பவர் 2 "டிராலி பேக்"குகளை ஜக்ஜித்சிங்கிடம் கணவரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில், ஜக்ஜித்சிங் - ஜஸ்வந்தர் தம்பதியர், விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் நுழைவு வாயிலில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பைகளை சோதனை செய்துள்ளனர்.

சோதனையின் போது அந்த பைகளில், 45 கைத் துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தெடந்து தொடர்ந்து சுங்க அதிகாரிகளுக்கும், தேசிய பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பாதுகாப்பு படையினர் அவர்களிடமிருந்த துப்பாக்கிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஜக்ஜித்சிங்கின் தம்பியான மஞ்சித்சிங், பாரீஸ் நகரில் இருந்து கொண்டுவந்த  பைகளை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது தெரிய வந்தது. மேலும்,  பைகளில் இருந்த துப்பாக்கிகளின் மதிப்பு ரூ.22.5 லட்சம் என கூறப்படுகிறது.

ஜக்ஜித்சிங் - ஜஸ்வந்தர் தம்பதியினர் முன்னதாக துருக்கியில் இருந்து 25 துப்பாக்கிகளை கடத்தி வந்ததாகவும், அப்போது பிடிபடவில்லை எனவும் விசாரணையின் போது கூறியுள்ளனர். இவர்களை தேசிய பாதுகாப்பு படை காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.