மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு... பிரபல பாலிவுட் நடிகரின் டிரைவர் அடித்துக் கொலை... 24 வயது மகனை கைது செய்த போலீஸ்.!
மும்பை சேர்ந்தபாலிவுட் நடிகரின் டிரைவர் அவரது மகனால் கொலை செய்யப்பட்டு சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரின் 24 வயது மகன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
மும்பையின் அந்தேரி பகுதியைச் சார்ந்த 53 வயதான நபர் பிரபல பாலிவுட் நடிகரிடம் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரது மகனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறை அவரது 24 வயது மகனை கைது செய்து இருக்கிறது. வேலைக்கு செல்லவில்லை என்று மகனை கண்டித்து வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாகவே தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான தகராறு தொடர்ந்து இருக்கிறது இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மோதலில் மகன் தாக்கியதில் தந்தை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பாலிவுடில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.