மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விமான பணிப்பெண்... போலீசார் விசாரணை..!
மேற்கு வங்காளத்தில் விமான பணிப்பெண் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா நகரில் பிரகதி மைதான் பகுதியில் உள்ள பெருநகர கூட்டுறவு வீட்டு வசதி கழகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் தேபோபிரியா பிஸ்வாஸ் (27). இவர் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் குடியிருந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் பலத்த காயங்களுடன் கீழே கிடந்துள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை எஸ்.எஸ்.கே.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, பிரியாவின் குடும்பத்தினர் கூறும்போது, நீண்ட நாட்களாக பிரியா மனஅழுத்தத்தில் இருந்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக அவருக்கு முறையாக பணி வழங்கப்படாததால் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.