மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருவிழாவில் தொலைந்த கற்பு!!.. கூட்டு பலாத்காரம் செய்த 7 பேரில் 5 பேரை வேட்டையாடிய போலீஸார்..!!
நாடகம் பார்க்க சென்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஷ்கரில் பஸ்தார் மாவட்டத்தின் மாவ்லிபதர் பகுதியில் வருடம் தோறும் நடத்தப்படும் திருவிழா சமீபத்தில் நடந்தது. இந்த திருவிழாவில், பல கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம். பிப்ரவரி மாத இறுதி மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில் ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த திருவிழாவில், நாடக போட்டி, சேவல் சண்டை மற்றும் சுத்து பட்டு கிராம மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஓவிய போட்டியிலும் கலந்து கொள்ளுவார்கள். இன்னும் பிற நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இந்நிலையில், கடந்த சனி கிழமை நாடகம் நடத்தப்பட்டு உள்ளது.
நாடகம் பார்க்க சென்ற பெண் ஒருவர் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இரவில் தனியாக இருந்துள்ளார். இதை கவனித்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணை ஆளில்லாத பகுதிக்கு கடத்தி சென்று, கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. சுயநினைவு திரும்பிய அந்த பெண் வீட்டுக்கு சென்று நடந்த விவரங்களை கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, பெண்ணின் பெற்றோர், தர்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் சூப்பிரெண்டு நிவேதிதா பால் கூறும்போது, திருவிழாவிற்கு வந்த பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தப்பியோடிய மீதமுள்ள நபர்களை தேடி வருகிறோம். என்று கூறினார்.