"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
நவ. 26-ல் நாடே கொண்டாட்டம்...! புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு - அரசு அதிகாரிகள் உறுதி..!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26 ஆம் தேதி முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜயசபா உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் டெல்லியில் கட்டப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு, மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்குகள், உணவு கூடங்கள் இந்த புதிய கட்டிடத்தில்உள்ளன. 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும், என இத்திட்டம் தொடங்கியது முதல் அரசு கூறி வருகிறது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை புதிய நாடாளுமன்றத்துக்கு மாற்றுவது, மோடிதலைமையிலான பா.ஜ.க அரசுக்கு மற்றொரு மைல்கல் சாதனையாக இருக்கும். புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடங்குவதற்கு, நவம்பர் 26 ஆம் தேதி பொருத்தமான நாளாக் இருக்கும் என கருதப்படுகிறது.
இதற்கான கட்டுமான பணிகளை நடப்பாண்டு அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஒப்பந்தகாரர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒப்பந்தகாரர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுடன் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் இருக்கைகள், மேசைகள் போன்ற மரத்திலான பொருட்கள் வெவ்வேறு இடங்களில் தயாராகி வருகின்றன.
பணிகளை முடிப்பதில் உள்ள சிரமத்தை போக்க, சிறிய அளவிலான ஆலோசனைக் கூட்டங்களும் அவப்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய திட்டத்தை குறுகிய காலத்தில், புதிய மாற்றங்களுடன் முடிப்பது மிகவும் கடினமான பணி என அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை, இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்துக்கு தயாராகிவிடும் என்பதில் நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளனர். அதனால், புதிய நாடாளுமன்ற கட்டிடம், இந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.