96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற அவலம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. இவர் நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த ராஜுவின் குடும்பத்தினர், அவரது உடலை பார்த்து கதறி அழுந்துள்ளனர். அதன்பின்னர் ராஜுவின் உடலுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக, உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வாகன உதவியை கேட்டுள்ளனர்.
In Meerut, UP, an elderly mother kept roaming around carrying the dead body of her young son on a cart. She was asking people for money for the last rites but no one helped. Outpost In-charge Amit Malik helped the elderly mother and performed the last rites. pic.twitter.com/vf2fjnYGh8
— iMayankofficial 🇮🇳 (@imayankindian) September 6, 2023
பலமணி நேரமாக வாகன உதவி கேட்டும் கிடைக்காததால், ராஜுவின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாய் மற்றும் தம்பியும் நடந்தே சென்றுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.