#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சோதனையில் சாதனை.! கைக்குழந்தையுடன் கைவிட்ட கணவன்.! ஐஸ்கிரீம், ஜூஸ் விற்ற ஊரிலேயே போலீஸ் அதிகாரி.!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.பி.ஆனி சிவா. 31 வயது நிரம்பிய இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 மாதக் கைக்குழந்தையுடன் விட்டுச்சென்றுள்ளார் காதல் கணவன்.
ஆனியை அவரது பெற்றோர் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதனால் ஆனி ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார். கடைசியாக தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து, திருவிழாக்களில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்வது என கிடைத்த வேலைகளை பார்த்துக் கொண்டு படிப்பிலும் விடாது கவனம் செலுத்தி வந்துள்ளார்.
தற்போது போலீஸ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்த ஊரிலே போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக ஆனி பணிக்குச் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், பத்து வருடங்களுக்கு முன்பு ஐஸ்கிரீம் விற்ற அதே இடத்திற்கு இன்று, நான்போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக திரும்புகிறேன் என கூறியுள்ளார். இந்தநிலையில், ஆனி உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.