மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மா சொன்ன ஒற்றை வார்த்தை. துடிக்க துடிக்க தற்கொலை செய்துகொண்ட மகன்! அதிர்ச்சி காரணம்.
சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக உள்ளனர். இதனால் தற்கொலை, கொலை போன்ற சமப்வங்கள் நடப்பதை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். இந்நிலையில் பப்ஜி விளையாட வேண்டாம் என தாய் கண்டித்ததால் 19 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்மை மாநிலம் பல்கர் மாவட்டம் தகானு என்னும் பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவர் ஹேமந்த். 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை அந்த பகுதியில் இருக்கும் மாவு மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக இருந்த ஹேமந்தை அவரது தாய் கண்டித்துள்ளார். பப்ஜி விளையாடாதே என்றும் படிப்பில் கவனம் செலுத்துமாறும் பலமுறை கூறியுள்ளார். இதில் மனவேதனை அடைந்த ஹேமந்த் சம்பவத்தன்று தூங்குவதாக கூறிவிட்டு தனது அறைக்குள் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது அறையில் பார்க்கையில் தூக்கில் தொங்கியவாறு ஹேமந்த் சடலமாக கிடந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து ஹேமந்த் எந்த ஒரு கடிதமும் எழுதவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.