மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியாவில் டாப் 10 ல் இருக்கும் கோடீஸ்வரர்கள்!. யார் முதலிடம் தெரியுமா?
தொடர்ந்து 11 வருடங்களாக இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, முதலிடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி என தெரியவந்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, 3 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார்.
இந்த ஆண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் விப்ரோ அதிபர் அசிம்பிரேம்ஜி இரண்டாவது இடத்தையும், ஆர்சலர் மிட்டல் தலைவர், லட்சுமி மிட்டல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து முதல் 10 இடங்களில் இந்துஜா சகோதரர்கள், பலோன்ஜி மிஸ்திரி, ஷிவ் நாடார், கோத்ரேஜ் குடும்பத்தினர், திலிப் சங்வி, குமாரமங்கலம் பிர்லா, கவுதம் அதானி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.