திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தகாத உறவால் நேர்ந்த விபரீதம்.. மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.!
கர்நாடக மாநிலம் யாதகிரி அடுத்த எஸ்.ஹோசல்லி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர ரெட்டி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த எரண்ணா என்பவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இவர்களது உறவானது ஏரண்னா குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சந்திரசேகர ரெட்டியை எரண்னா குடும்பத்தினர் கையும் களவுமாக பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். மேலும் இதனை தடுக்க வந்த சந்திரசேகர ரெட்டியின் குடும்பத்தினரையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன சந்திரசேகர ரெட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் தனது இறப்பிற்கு காரணம் எரண்னா மற்றும் 8 பேர் என்று கடிதம் ஒன்றினை எழுதி வைத்து உயிரை மாய்த்துள்ளார். இதனையடுத்து சந்திரசேகர ரெட்டியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள ஏரண்னாவின் குடும்பத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.