மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துயரம்... கவனக்குறைவால் 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... வீடியோ இணைப்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கவனக்குறைவால் 17 வயது சிறுவன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலாட் நகரில் உள்ள ரயில் நிலையத்தின் மூன்றாவது பிளாட்பாரத்தில் அமர்ந்து சில இளைஞர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் தங்களது டப்பாவை கழுவுவதற்காக பிளாட்பாரம் ஓரத்திற்கு தண்டவாளம் அருகே சென்றனர்.
मुंबई के मलाड में ट्रेन से टकराया युवक, CCTV फुटेज आया सामने#accident #mumbai #mumbaitrain #mumbaitrainaccident #mumbailocal #malad pic.twitter.com/2HmwylbnlL
— Shubham Rai (@shubhamrai80) June 30, 2023
அப்போது அவர்களுடன் வந்திருந்த 17 வயது சிறுவனான மயங்க் அணில் சர்மா தண்டவாளத்திற்கு மிக அருகில் நின்று கொண்டு தனது டிபன் பாக்ஸை கழுவிக் கொண்டிருந்தார். அவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டே கழுவிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தண்டவாளத்தில் வந்த ரயில் சிறுவனின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து சிறுமனை மீட்ட ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மருத்துவமனையில் சிறுவனை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது.