மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமேசானில் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி.! வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான கேஷ்பேக்.!
அமேசான் செயலி மூலம் விமான மற்றும் பேருந்து பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியா, ஐ.ஆர்.சி.டி.சி-யுடன் கூட்டு சேர்ந்து பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய முன்பதிவு அம்சம் அமேசானில் மொபைல் வலைத்தளத்திலும், ஆண்ட்ராய்டு பயன்பாட்டிலும் பெறலாம். எந்தவொரு கூடுதல் சேவை கட்டணங்கள் இல்லை மற்றும் கேஷ்பேக் சலுகைகள் உள்ளிட்ட பல முன்பதிவு சலுகைகளையும் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
மேலும், அதில் முன்பதிவுக்கான கட்டணத்தை வாடிக்கையாளா்களுக்கு திரும்ப அளிக்கும் சலுகையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமேசான் செயலி மூலம் ரயில்களில் இருந்தபடியே இருக்குமிடத்தையும், பயணத்துக்கான இடம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையையும் அறிந்துகொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் முதன்முதலாக செய்யும் டிக்கெட் முன்பதிவில் 10 சதவீதம் கேஷ்பேக் (ரூ .100 வரை) கிடைக்கும், அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் முன்பதிவுக்காக 12 சதவீத கேஷ்பேக் (ரூ. 120 வரை) பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.