பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முக்கிய செய்தி: நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்வு! வெளியானது அதிரடி அறிவிப்பு!
ரயில்வே கட்டணம் உயர்த்தப்படலாம் என செய்திகள் வெளியானதை அடுத்து இன்று இந்திய ரயில்வே கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்தியன் ரயில்வே.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி, புறநகர் ரயில்களுக்கு கட்டண உயர்வு இல்லை, ஏசி இல்லாத பேசஞ்சர் ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், விரைவு ரயில்களுக்கு(Mail/Express) ரயில்களுக்கு இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி(Sleeper class), முதல் வகுப்பு ஆகிய குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து வகை ஏ.சி வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 4 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.