3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
தனக்குத்தானே போட்டி; கெத்து காட்ட நினைத்து விலா எலும்பில் வசமாக வாங்கிய பிலிப்ஸ்.! கதறலோ கதறல்.!
இளங்கன்று பயமறியாது என்பதற்கு உதாரணமாக, இளம் தலைமுறை தனது செயல்பாட்டின் பயம் தெரியாமல் செயல்படுவது நல்லது எனினும், அவை ஆபத்தாக மாறாதவரை எந்த பிரச்சனையும் இல்லை. அதீத தைரியம் சில சூழல்களில் நமது உயிரை காக்கும் என்றாலும், இடம் தெரியாமல் விளையாடினால் கட்டாயம் அதனால் வரும் பிரச்சனை மற்றும் இடர்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
கெத்து காட்ட நினைத்து கதறிய இளைஞர்:
இந்நிலையில், திருமண நிகழ்வு ஒன்றில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் வைரல் விடீயோவில், இளைஞர் தனது டீ-சர்ட்டை கழற்றிவிட்டு உற்சாகமாக பலரின் முன்பு சாகசம் செய்தார். தலைகீழாக நின்றபடி அந்தர்பல்டி அடித்தவர், முறையான பயிற்சியின்மை மற்றும் அதீத நம்பிக்கை, பார்வையாளர்களை தன்பக்கம் திருப்ப நினைத்து தலைகீழாக கவிந்து விலா எலும்பு மற்றும் கைகளில் பலத்த அடியை பரிசாக பெற்றார்.
ये छपरी को इतना कॉन्फिडेंस आता कहां से है।
— Reetesh Pal (@PalsSkit) May 6, 2024
मुझे ये सब बकलोली ना करने का घमंड है 😂 pic.twitter.com/yAJ9ewC8DI
பயிற்சியில்லாமல் விபரீத சாகசம் வேண்டாமே..
அவர் எடுத்த முயற்சியை முதலில் பாராட்டிய பலரும், அவர் வலியால் கதறியதால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முறையான பயிற்சியின்றி மேற்கூறிய சாகசம் செய்வது கழுத்து உடைப்பு, இதயம் அதிர்ச்சி போன்ற விளைவுகளை உண்டாக்கும். சில நேரம் மரணமும் ஏற்படலாம். ஒருசில சாகச காட்சிகளை முறையான பயிற்சிக்குப்பின் செய்வதே சாலசிறந்தது. இல்லையேல் வரும் விளைவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அது மரணமாகவும் இருக்கலாம்.