மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டீ விற்பதில் தொடங்கியவர் மோடி.! நெகிழ்ந்து பேசிய டிரம்ப்..! கட்டிப்பிடித்து நெகிழ்ந்த மோடி.!
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மற்றும் மகள் உடன் இன்று தாஜ்மகாலை சுற்றி பார்த்தார். பின்னர் விழா மேடையில் நமஸ்தே என பேச தொடங்கிய ட்ரம்ப் தமக்கு சிறப்பான வரவேற்பு வழங்கிய எனது உண்மையான நண்பர் மோடிக்கு நன்றி என கூறியுள்ளார் டிரம்ப்.
மேலும், சமையல் எரிவாயு, இணையதள சேவையை இந்தியாவுக்கு கொண்டுவர மோடி இரவு பகல் பாராமல் உழைத்ததாகவும் புகழாரம் சூட்டினார் ட்ரம்ப். அதுமட்டும் இல்லாமல், இந்திய நாட்டிற்காக உழைக்கும் மோடி, இளம் வயதில் டீ விற்றவர் என்று கூறி நெகிழ்ந்தார் ட்ரம்ப்.
ட்ரம்பின் பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட மோடி மேடையில் இருந்து எழுந்துவந்து ட்ரம்பை கட்டி பிடித்து நன்றி கூறினார். மேலும் பேசிய ட்ரம்ப், இந்த நாளில் இருந்து இந்தியர்கள் அமெரிக்க மக்களின் இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளதாகவும், நட்புடன் தங்களிடம் வந்தால் வரவேற்போம் என்றும், பயங்கரவாதிகளுக்கு தங்களது கதவுகள் மூடப்பட்டிருக்கும் என்றும் ட்ரம்ப் பேசினார்.