#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டின் முன் காய்ந்த இளம் பெண்ணின் உள்ளாடை.. பைக்கில் வந்த வாலிபர்கள் செய்த காரியம்.. வைரல் வீடியோ..
இளம் பெண்ணின் உள்ளாடையை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் சதார் காவல் நிலைய எல்லைப் பகுதியில் வசித்து வரும் சஞ்சய் சவுத்ரி என்பவர் காவல் நிலையத்தில் வினோதமான புகார் ஒன்றை கொடுத்தார். அவர் கூறிய புகாரை கேட்டு போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆம், சஞ்சய் சவுத்ரி கொடுத்த புகார் என்னவென்றால், இரண்டு இளைஞர்கள் தன்னுடைய மகளின் உள்ளாடைகளை திருடிச்சென்றதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து போலீசார் அந்த வீடியோ காட்சியை சோதனை செய்தபோது, பைக்கில் வரும் இரண்டு இளைஞர்கள் சஞ்சய் சவுத்ரி வீட்டின் எதிரே வாகனத்தை நிறுவிட்டு, ஒரு இளைஞர் சற்று நகர்ந்துசெல்ல, மற்றொரு இளைஞர் சஞ்சய் சவுத்ரியின் வீட்டு வாசலில் கொடியில் காய்ந்துகொண்டிருந்த பெண்ணின் உள்ளாடையை திருடி ஸ்கூட்டியின் சீட்டுக்குக் கீழே வைத்துப் பூட்டிவிட்டு, வேக வேகமாக ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து பறந்துவிடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலானநிலையில், இதைகூடவா திருடுவீர்கள் என நெட்டிசன்கள் அந்த வாலிபர்களை குறித்து கமெண்ட் செய்துவருகின்றனர். மேலும் போலீசார் வீடியோ ஆதாரத்தை வைத்து, இரண்டு வாலிபர்களையும் கைது செய்துள்ளனர்.
முகமது ரோமின் மற்றும் முகமது அப்துல் என்ற அந்த இரு இளைஞர்களும், தாங்கள் வேடிக்கைக்காக இளம் பெண்ணின் உள்ளாடையை திருடியதாக காவல்துறையினரிடம் கூறியிருக்கின்றனர். எனினும் அவர்கள் இருவர் மீதும் திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
उप्र के मेरठ में स्कूटी सवार दो युवकों ने घर के बाहर सूख रहे लड़की के अंडर गारमेंट्स चुराए। एक लड़के ने कपड़े चुराए और दूसरा टोपी पहनकर मस्जिद में नमाज पढ़ने चला गया। कबीर समेत दो के खिलाफ पुलिस में शिकायत। #Meerut #Up pic.twitter.com/MgV6uI4zv0
— Sachin Gupta | सचिन गुप्ता (@sachingupta787) March 14, 2021