#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டுக்கு போக பஸ் கிடைக்காததால் அரசு பேருந்தை திருடி ஒட்டி சென்ற நபர்..! அதிர்ச்சி சம்பவம்.!
தான் போக வேண்டிய இடத்திற்கு பேருந்து கிடைக்காததால் மர்ம நபர் ஒருவர் அரசு பேருந்தை திருடி, அதை தான் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒட்டி சென்றுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின் படி, பேருந்து ஓட்டுநரான இலியாஸ் மற்றும் நடத்துனர் ஜெகதீஸ் ஆகியோர் பேருந்தை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கடைக்குச் டீ குடிக்க சென்றுள்ளனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்காக பயணிகள் பேருந்தில் காத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், டீ குடித்துவிட்டு பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்து நிறுத்திய இடத்தில் வந்து பார்த்தபோது பேருந்தையும், அதில் இருந்த பயணிகளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவல் தீயாக பரவியதை அடுத்து அனைவரும் பேருந்தை தேடிக்கொண்டிருந்த நிலையில் 1 மணி கழித்து பஸ் டிப்போவிற்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில், பேருந்தை அடையாளம் தெரியாத ஒருவர் எடுத்து அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அங்கு பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுவிட்டார் என்றும், பேருந்து தற்போது பயணிகளுடன் ஒரு ஹைவேயில் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்ற அதிகாரிகள், பயணிகளிடம் இது குறித்து விசாரித்ததில், தான் ஒரு ஓட்டுநர் கம் நடத்துனராக பணியாற்றுவதாகக் கூறி பயணிகளிடம் பயணித்ததிற்கான காசையும் வாங்கிவிட்டு அந்த காசுடன் அந்த மர்மநபர் எஸ்கேப் ஆனது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பேருந்தை திருடி, பணிகளிடம் பணத்தை வாங்கிக்கொடு தப்பித்து சென்ற அந்த மர்ம நபரை வலை வீசி தேடிவருகின்றனர்.