திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தினமும் மோமோஸ் வாங்கித்தராததால் ஆத்திரம்; கணவரிடம் விவாகரத்து கேட்டு பெண் புகார்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் - அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். கணவர் ஷூ பேக்டரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மனைவி வீட்டில் இருக்கிறார்.
இந்நிலையில், மனைவிக்கு மோமோஸ் மீது அலாதி ஆர்வம், தினமும் அதனை வாங்கி சாப்பிட்டு பழகி இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் தொடக்கத்தில் கணவர் மோமோஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
பின் சூழ்நிலை மற்றும் பணப்பிரச்சனை காரணமாக தன்னால் இயன்றபோது மட்டுமே வாங்கிக்கொடுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பெண்மணி, தினமும் மோமோஸ் வேண்டும் என அடம்பிடித்து இருக்கிறார்.
ஒருகட்டத்தில் கணவரால் மோமோஸ் வாங்கிக்கொடுக்க இயலாத சூழ்நிலை ஏற்படவே, விரக்தியடைந்த பெண்மணிஜி ஆக்ரா காவல் நிலையத்தில் மோமோஸ் வாங்கிக்கொடுக்காத கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.
இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.