மாணவர்களிடம் உரையாற்றும்போதே பிரிந்த உயிர்: கான்பூர் ஐஐடி பேராசிரியர் மாரடைப்பால் மரணம்.!



UP Kanpur IIT Professor Died Heart Attack While he Speech on ALumini Meet 

 

உங்களின் உடல்நலனில் கவனம் செலுத்துங்களென்று கூறிக்கொண்டு இருக்கும்போதே, பேராசிரியர் மாரடைப்பால் மரணத்தை தழுவிய சோகம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் ஐஐடி-யில் மூத்த அறிவியல் அறிஞர் மற்றும் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சமீர் காண்டேகர். 

இவர் நேற்று பல்கலை.,யில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டு இருந்தார். அச்சமயம் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்தார். 

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அங்கு சமீரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. அவர் மாணவர்களுக்கு உடல்நலனை பேணிப்பாதுகாக்குமாறு அறிவுரை வழங்கி இருக்கிறார். 

அப்போதுதான் அவரும் மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துள்ளார். மருத்துவர்கள் பேராசிரியர் மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்த தகவல் ஐஐடி மாணவர்களிடையே மட்டுமல்லாது, செய்தியை அறிந்த பலருக்கும் சோகத்தை தந்துள்ளது.