மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்க யுபிஐ கணக்கை ஆக்டிவேட் பண்ணலையா?; இன்னும் 2 நாள் தான்.. உடனே இதை செய்யுங்க.!
டிஜிட்டல் இந்தியாவில் பணப்பரிவர்த்தனைக்கு தற்போது யுபிஐ வழிமுறைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. யுபிஐ வழி பணபரிமாற்றத்தில் போன் பே, கூகுள் பே உட்பட மூன்றாம் தர செயலிகள் உபயோகம் செய்யப்படுகின்றன.
இவற்றில் கடந்த ஓராண்டுகளாக எந்தவிதமான பரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கும் யுபிஐ கணக்குகளை வரும் டிசம்பர் 31-ம் தேதியோடு முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் உங்களிடம் யுபிஐ கணக்கு இருந்து அது கடந்த ஒரு வருடமாக உபயோகம் செய்யப்படாமல் இருந்தால், நீங்கள் கணக்கை புதுப்பித்துக் கொள்ள இந்த இரண்டு நாட்கள் வாய்ப்பாக அமையும். உங்களின் பழைய யுபிஐ கணக்கிலிருந்து யாரேனும் ஒருவருக்கு பணம் அனுப்பினாலும் அது மீண்டும் செயல்பட தொடங்கிவிடும்.