மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுவனுடன் காதல் வயப்பட்ட 15 வயது சிறுமி; மகளை துண்டுதுண்டாக்கி கொடூரமாக கொலை செய்து கபடநாடகம் ஆடிய தாய்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோசாம்பி மாவட்டத்தைச் சார்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் இருந்து மாயமானதாக காவல் நிலையத்தில் அவரது தாய் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், பெண்ணின் சடலம் அங்கிருந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், 15 வயது சிறுமி காதல் வயப்பட்டதன் காரணமாக, தாய் மற்றும் அவரின் மருமகளால் கொலை செய்யப்பட்டு கோடாரியால் உடல் துண்டிக்கப்பட்டது அம்பலமானது.
துண்டிக்கப்பட்ட உடலை சாக்கு முட்டையில் கட்டி, ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றில் வீசி இருக்கின்றனர். பின், தங்களின் மீது சந்தேகம் எழக்கூடாது என காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, சிறுமியின் தாயிடம் நடந்த விசாரணையில், சிறுமியின் கொலைக்கான காரணம் விலகியது. விசாரணைக்கு பின் சிறுமியின் தாய் சிவபதியை கைது செய்த அதிகாரிகள், அவரின் மருமகள் மீனாவை தேடி வருகின்றனர்.