#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
26 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம்; 30 வயது அதிகாரி கைது..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் 26 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை புரிகிறார்.
இதே பகுதியில் 30 வயதுடைய துணை இராணுவ படை அதிகாரி வசித்து வருகிறார். சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு பெண்மணி வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார்.
அச்சமயம், பெண்மணியை அழைத்த ஜவான், திருமண மண்டபத்தில் வரவு-செலவு கணக்கு தொடர்பான விவகாரத்தை சரிபார்த்து தருமாறு அழைத்துள்ளார்.
ஜவான் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால், இருவருக்கும் இடையே அறிமுகம் இருந்துள்ளது. இதனால் பெண்ணும் அச்செயலை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.
மண்டபத்திற்குள் உள்ள அறைக்குள் சென்றதும், ஜவான் கதவை தாளிட்டு பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளார். பதறிப்போன பெண்மணி ஜவானை எதிர்க்க, அவர் செருப்பால் அடித்து பெண்ணை தாக்கியுள்ளார்.
பின் அறைக்குள் வந்து பெண்ணை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து, இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட பெண்மணி நேற்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ஜவானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.