"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
கடனை அடைக்க 6 வயது சிறுமி கடத்தல்; மாமா என நம்பிச்சென்ற பிஞ்சுக்கு நேர்ந்த பயங்கரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி பல்லவி (வயது 6). இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மாயமாகினார். அவரை தேடியும் காணாது பதறிப்போன குடும்பத்தினர், அவரை கண்டறிந்துதர வேண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுமியின் மாமா அமித் மற்றும் அவரின் நண்பர் அமித் ஆகியோர் சேர்ந்து சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. சிறுமியின் மாமாவுக்கு ரூ.6 இலட்சம் வரை கடன் இருந்துள்ளது.
இதனால் குழந்தையை கடத்தி பணம் கேட்டு, அதில் வரும் தொகையை வைத்து கடனை அடைக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இவர்களின் திட்டப்படி பணம் கேட்டு மிரட்டிய நிலையில், பணம் வராததால் சிறுமியை கொலை செய்து உடலை வீதியில் வீசி இருக்கின்றனர்.
மேலும், சிறுமியின் அடையாளத்தை மறைக்க முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது. இக்கொலையை செய்த இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அதிகாரிகள் குற்றவாளிகள் இருவருக்கும் வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.