மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது விருப்பப்படி மனைவி சேலை அணியாததால் விரக்தி; தம்பதிக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவு.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் தீபக். அங்குள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் - தீபக்கிற்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்கள் இருவரும் தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கிய நிலையில், மனைவி அவரின் விருப்பத்தின்பேரில் தனது பிடித்த சேலைகளை எப்போதும் அணிந்து வந்துள்ளார். வெளியே செல்லும்போதும், வீட்டில் இருக்கும்போதும் அவரின் விருப்பப்படி உடை அணிந்து இருக்கிறார்.
ஆனால், அவ்வப்போது தனது மனைவியின் சேலை அணியும் விருப்பத்தில் குறுக்கிடும் தீபக், தனக்கு பிடித்த சேலைகளை அணிய வற்புறுத்தி இருக்கிறார். இது தம்பதிகளுக்கு இடையே மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் இருவரும் ஒருகட்டத்தில் பிரிய முடிவெடுத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, அவர்களை சேர்த்து வைக்க பெற்றோர், உறவினர்கள், நீதிமன்றம் ஆகியவை எடுத்த முயற்சித்தது தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.