மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொல்லச்சொல்ல கேட்காத குடிகார கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி: மதுபிரியர்களே உஷார்.!
சரக்கில் தான் சொர்க்கம் இருக்கிறது என குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் ஒவ்வொரு குடிகாரர்களுக்கும், இந்த செய்தி ஓர் எச்சரிக்கை பாடமாகவும் அமையலாம்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியை சேர்ந்த பெண்மணி, தனது கணவரின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்த குற்றத்தை செய்த மனைவி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் மீது இந்திய அரசியலமைப்பு சட்டம் 302 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பெண் குழந்தைகளுடன் தம்பதி வசித்து வந்த நிலையில், கணவருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளது.
குடிப்பழக்கத்தை கைவிடக்கூறி மனைவி பலமுறை கண்டித்தும் பலனில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று மனைவி தனது கணவரை கண்டிக்கவே, அவர் கேட்காததால் ஆத்திரமடைந்து கணவரின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார்.
பின் கணவர் மர்மமாக இறந்துவிட்டதாக பெண் கூறிய நிலையில், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது.