மத்திய அரசின் திட்டத்தை பெற ரூ.10000 இலஞ்சம் கேட்ட அதிகாரி; அரசு அலுவலகத்தை கொளுத்த முயற்சித்த இளைஞர்.!



Uttar Pradesh Barabanki Man Try to Set Fire Govt Office due to Bribery Issue 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாரபங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த சுபைர் என்ற நபர், திடீரென அலுவகத்திற்கு தீவைத்து கொளுத்த முயற்சித்தார்.

அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அலுவலகத்தை பாதுகாத்த அதிகாரிகள், தீயினை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விசாரணையில், இலஞ்ச விவகாரத்தில் ஆத்திரமடைந்து அரசு அலுவலகத்தை கொளுத்த முயற்சித்தது உறுதியானது. 

பிரதமரின் ஆவாஸ் யோஜனா (ஏழை மக்களுக்கு மலிவு விலையில் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம்) திட்டத்தின் கீழ் பலன்பெற கிராம பஞ்சாயத்து செயலாளர் பினா குமாரி என்பவர் ரூ.10000 இலஞ்சம் கேட்டுள்ளார். 

முதல் தவணைக்கும் அவர் வேறு வழியின்றி பணம் கொடுத்ததாக தெரியவரும் நிலையில், இரண்டாவது தவணைக்கும் பணம் கேட்டதால் மனம் நொந்து இவ்வாறான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சுபைரின் குற்றசாட்டு தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகிறது.