மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண நிகழ்வில் பயங்கரம்: பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தலித் இளைஞர் சுட்டுக்கொலை..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர்க், ஆஸ்பூர் தேவசரா பகுதியில் வசித்து வருபவர் பூல்சந்திர துபே. இவரது மகளுக்கு சனிக்கிழமை அன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமண கொண்டாட்டத்தின்போது, பந்தல் அமைக்கும் பணியில் அஜய் குமார் என்ற இளைஞர் ஈடுபட்டு இருந்துள்ளார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
துபேயின் மருமகன் முறைகொண்ட உறவினர் பிண்டு என்பவர், மும்பையில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக அங்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிண்டு திடீரென அஜய் குமாரின் மீது உரிமம் பெற்றுவைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிக்குண்டு காயத்துடன் படுகாயம் அடைந்த அஜய் குமார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக அஜய் குமாரின் தந்தை சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். குற்றவாளிகளை கைது செய்யநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளி கைதான பின்னரே, அவர் எதற்காக தொழிலாளியை சுட்டு கொலை செய்தார்? என்ற விபரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிகின்றனர்.