மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பருடன் பார்க்கில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்: படுக்கைக்கு அழைத்து காவலர் அட்டூழியம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் உள்ள பூங்காவில், கடந்த செப். 28ம் தேதி பெண்மணி ஒருவர் தனது ஆண் நண்பருடன் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது, சாதாரண ஆடையில் வந்து தங்களை காவலர்கள் என அறிமுகம் செய்த 2 பேர் கும்பல், பெண்ணிடம் விசாரணை என்ற பெயரில் பாலியல் ரீதியாக அணுக நிலைத்துள்ளது.
சுதாரித்த பெண்மணியும் - ஆணும் காவலர்களிடத்தில் வாக்குவாதம் செய்தவாறு இருந்துள்ளனர். அப்போது, அதிகாரி ஒருவர் பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் பணம் தர வேண்டும்.
ஒருநாள் படுகைக்கு நீ வேண்டும் என அருவருக்கத்தக்க வகையில் பேசி இருக்கின்றனர். சுமார் 3 மணிநேர மிரட்டலுக்கு பின்னர், அவர்கள் ரூ.1000 பணம் ஆன்லைன் வழியே அனுப்பச்சொல்லி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி கோட்வாலி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இரண்டாம் நிலை காவலர் சர்ச்சை செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள், அவருடன் வந்த நண்பர்கள் 2 பேருக்கு வலைவீசி இருக்கின்றனர்.