திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உணவு டெலிவரி செய்யச்சென்று, 23 வயது இளம்பெண் துணிகர பலாத்காரம்; காமுகனை சுட்டுப்பிடித்த போலீசார்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 23 வயது இளம்பெண், இணையவழியில் மளிகைப்பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார்.
இதனையடுத்து, அவர் ஆர்டர் செய்த பொருட்களை சுமித் சிங் என்ற டெலிவரி ஊழியர் எடுத்து வந்த நிலையில், வீட்டில் பெண்மணி தனியாக இருப்பதை புரிந்துகொண்டு, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து, புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உடனடியாக குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இக்குற்றத்தில் ஈடுபட்ட சுமித்தை அவரின் வீட்டருகே வைத்தும் கைது செய்தனர். அவர் காவல் துறையினரிடம் இருந்து தப்பி செல்ல முயற்சித்தால், காவல் துறையினரால் முட்டியில் சுட்டு பிடிக்கப்பட்டார்.
பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே கள்ளத்தனமாக மது விற்பனை செய்த புகாரில் சிக்கிய நிலையில், தற்போது டெலிவரி நிறுவனத்தில் வேலைபார்த்து பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.