மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி வாகனத்தில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.. உண்மையை மறைக்க முயன்ற நிர்வாகம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12 வயதுடைய சிறுமி ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி தினமும் தனது பள்ளி வாகனத்தில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று 12 வயது சிறுமியை வேன் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தும் பதில் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பள்ளியைச் சார்ந்த இரண்டு ஆசிரியர்கள், பள்ளி மேலாளர், தலைமை ஆசிரியர் ஆகியோர் இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோர் கான்பூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் வேன் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பள்ளி தலைமையாசிரியர், மேலாளர், இரண்டு ஆசிரியர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.