#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
14, 16 வயது சிறுமிகள் மூவர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை; தூக்கில் சடலமாக மீட்பு.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வருபவர் ராம் ரூப். இவரின் மகன் சஞ்சு. இவர்களின் உறவினர் ரஜ்ஜு.
இவர்களின் செங்கல்சூளையில் 14 மற்றும் 16 வயது சகோதரிகள் சம்பவத்தன்று குளித்துக்கொண்டு இருந்ததை படமெடுத்து இருக்கின்றனர். சிறுமிகளின் தந்தை செங்கல்சூளையில் வேலை பார்த்து வருகிறார்.
சிறுமிகள் சம்பவத்தன்று குளித்ததை வீடியோ எடுத்த கும்பல், அதனை காண்பித்து மிரட்டி இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் செங்கல் சூளையில் இருக்கும் மரத்திலேயே தூக்கிட்டு தங்களின் உயிரைமாய்த்துக்கொண்டனர்.
இவ்விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சஞ்சு, ராம், ரஜ்ஜு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.